Mobile Gold shop ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது, பெங்களூருவில் விசாரணை

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். அசையும் சொத்தாக அதாவது பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்த ஹரி நாடார் இப்போது இரும்புக் கம்பிக்குள் அடைபட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 5, 2021, 09:20 PM IST
  • 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் ஹரி நாடார்
  • மோசடி வழக்கில் கேரளாவில் கைது
  • பெங்களூருவில் விசாரணை
Mobile Gold shop ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது, பெங்களூருவில் விசாரணை title=

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். அசையும் சொத்தாக அதாவது பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்த ஹரி நாடார் இப்போது இரும்புக் கம்பிக்குள் அடைபட்டுள்ளார்.

16 கோடி மோசடி தொடர்பாக ஹரி நாடார் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கேரள மாநிலம் கோவளத்தில் பெங்களூரு போலீசார்இன்று ஹரி நாடாரை கைது செய்தனர். விசாரணைக்காக அவர் பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே ஹரி நாடார் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் ஆலடி அருணா மற்றும் அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர்.

Also Read | ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை!

இதில் அதிமுக மனோஜ் பாண்டியன், 3,539 வாக்குகள் அதிகம் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக ஆலடி அருணாவை வென்றார்.  37,727 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் ஹரி நாடார். 

தமிழ்நாட்டின் (Tamil Nadu)  திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இருந்து போட்டியிட்டார் 39 வயதான ஹரி நடார். அவரது பிரமாணப் பத்திரத்தின் படி, அவர் 12.61 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பிலான அசையும் சொத்துக்களை வைத்திருக்கிறார். 11.2 கிலோ எடையுள்ள 4.73 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் வைத்திருக்கிறார் ஹரி நாடார். 

வணிகர் மற்றும் சமூக சேவகர் என்று ஹரி நாடாரின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள ஹரி நாடார் மீது 15 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒரு வழக்கில் தான் தற்போது ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.   

Also Read | தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News