காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த 23-10-2017 அன்று விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தைக் கலைக்க சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பேரறிவாளன் விடுதலை பெரும் வரை, அவரது சிறைவிடுப்பை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
மெர்சல் திரைப்படத்திற்குக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, அப்படத்தின் வசனத்தை நீக்கக்கோருவதையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்களின் 113-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (27-09-2017) புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா. ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.
மியான்மரில் நடந்தேறும் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று 5 மணிக்கு மழலையர் பாசறை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சி அறிவிப்பில் கூறியதாவது:-
நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் நீர் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் செப்டம்பர் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும்.
இதுதொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மாநில உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அனிதா மரணத்தை அடுத்து, தமிழக சட்ட கல்லூரி மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ கனவோடு நீட் தேர்வை எழுதிய ஏழை குடும்பத்தை சேர்ந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனது. அதனால் மனம் உடைந்து போன அரியலூர் மாணவி அனிதாவின் கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இவர் நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஆனாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனதால் அரியலூர் மாணவி அனிதாவின் கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் த தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர் போட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது,
சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அதே இடத்தில் வைக்க கமல்ஹாசன் குரல் கொடுப்பேன் என்று சொல்லட்டும். அவருடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.
நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டம் கோவில்பட்டி காந்தி மைதானம் அருகேயுள்ள ரதவீதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார் அப்போது:-
நாம் தமிழகத்தில் வாழ்வது எப்படி என்ற பயம் எழுந்துள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை. ஓடும் நீரை கூட ஆழ்துளை கிணறு போட்டு தான் குடிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கல்குவாரியில் இருந்து குடிநீர் வழங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சி ஆரம்பிக்கவே தான் ரஜினிகாந்த் அவர்கள் நான் பச்சை தமிழன் என்று கூறுகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
வாழவைத்த தமிழகம் என்று கூறி வந்த ரஜினிகாந்த், தற்போது மட்டும் ஏன் நான் பச்சை தமிழன் என்று கூறுகிறார். அரசியலில் நுழைவதற்காக தான் இப்படி கூறுகிறார். தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வராது, ஆனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசியல் தலைவர்கள் மட்டும் வருவார்கள் என்றால் அது எப்படி நியாயமாகும்?
அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அதிமுக என்ற பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மோடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் எப்படி சந்திக்கிறார்? இதில் எந்த அரசியலும் இல்லை எனக்கூறுவதை எப்படி நம்புவது?
பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1342_வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழ்ப்பெண் தொழிலாளர்களை இழிவாகப் பேசிய கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணிக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மருத்துவ மேற்படிப்பில் நடைமுறையில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றுவரும் மருத்துவர்களின் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (23/04/2017) காலை 11 மணியளவில் பங்கேற்றார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதராவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த 33 நாள்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசிக்க தி.மு.க இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்நிலையில் சீமான் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்.
போராட்டத்தின் போது சீமான் கூறியது:-
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப்பில், கடந்த இரண்டு நாட்களாக ஆபாச வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் ஆண் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்ற வதந்தியும் பரவி வருகிறது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.