நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் நீர் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் செப்டம்பர் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும்.
இதுதொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மாநில உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சியை சேர்ந்த தினகரன் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 5, 2017
நீட் தேர்வை எதிர்த்து கழக மாணவர் அணி சார்பில் 9.9.2017 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் pic.twitter.com/oPeEIbgdV5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 5, 2017