எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நிலக்கரி சாம்பல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் கமல் ஹாசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டிய நடிகர் கமல்ஹாசன் நேற்று எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு நடத்தினார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியார்களிடம் கூறியது:
சர்க்கரை விலை உயர்வு பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெறவே வழிவகுக்கும். இதேநிலை நீடித்தால் வருங்காலத்தில் ரேஷன் கடையே இல்லாத நிலை உருவாகும். மேலும் அவர் பேசுகையில், எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்தது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.