அனிதா மரணத்தை அடுத்து, தமிழக சட்ட கல்லூரி மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ கனவோடு நீட் தேர்வை எழுதிய ஏழை குடும்பத்தை சேர்ந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனது. அதனால் மனம் உடைந்து போன அரியலூர் மாணவி அனிதாவின் கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இவர் நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஆனாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை.
அனிதாவில் மரணத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர் போட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உச்சநீதிமன்றத்தில் நீட்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
"மே 17 இயக்கம்" அமைப்பை சேர்ந்தகள் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் அமைந்துள்ள பி.ஜே.பி தலைமையகத்திற்கு முற்றுகையிட்டனர். அப்பொழுது தமிழக காவல்துறை அவர்களை கைது செய்தனர். அதன் பிறகு, பி.ஜே.பி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் பல அரசியல் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். அப்பொழுது தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின், அனிதாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நன்கொடை அளித்ததாக தெரிவித்தார்.