நீட் தேர்வை நிரந்தரமாக நீக்குக - நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!!

Last Updated : Sep 4, 2017, 04:56 PM IST
நீட் தேர்வை நிரந்தரமாக நீக்குக - நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!!  title=

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனதால் அரியலூர் மாணவி அனிதாவின் கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் த தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர் போட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தற்கொலை செய்து கொண் அனிதாவிற்கு, தங்கை அனிதாவிற்கு வீரவணக்கம் என நாம் தமிழர் கட்சியினர் கோஷங்கள் போட்டனர்.

நாம் தமிழர் கட்சி:-

 

தகவல்கள்: நாம் தமிழர் கட்சி

Trending News