ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மட்டுமே எடுக்கமுடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் ரூ. 2 ஆயிரம் நோட்டு ஏடிஎம் மையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.50,000 கோடி பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது எனக்கூறினார். மக்களுக்கு பணம் செல்லும் அனைத்து வழிகளும் அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பணபரிவர்த்தனையை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும்.பணபரிவர்த்தனை தொடர்பாக மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம். மக்களின் வசதிக்காக அனைத்து வங்கிகள், தபால் நிலையங்கள், ஏடிஎம்.,கள், இ-பே முறைகளும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவாக பணம் எடுப்பதற்காக நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம் நிறுவப்படும் என்று கூறினார்.
அவர் கூறிய சில முக்கிய அம்சங்கள்:-
வணிகர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் வரை எடுத்து கொள்ள அனுமதி.
வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
ஏ.டி.எம்களில் மாற்றம் செய்யபட்டு நாளை முதல் ரூ. 2 ஆயிரம் கிடைக்க வழி வகை செய்யப்படும்
புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு, புழக்கத்திற்கு வந்துள்ளன.
போதிய அளவு ரூபாய் நோட்டுகள் தபால் நிலைஅயங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
டெபிட், கிரெடிட் கார்டு பணபரிவர்த்தனை மீது விதிக்கப்படும் கட்டணங்களில் சலுகை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
பணம் விரைவாக மக்களுக்கு கிடைக்க அனைத்து வழிகளிலும் வகை செய்யப்பட்டு உள்ளது.
தினமும் பலமுறை பணபரிவர்ர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்களை சீரமைக்க சிறப்பு படை அமைக்கபட்டு உள்ளது.
இணைய வழி பண பரிவர்த்தனைக்கான அனைத்து சேவை கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது
வங்கிசேவைகள் மக்களிம் சென்று சேர்ந்து அடைந்துள்ளதா என கண்காணிக்க குழுக்கள் அமைப்பு.