பழைய ரூபாய் நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை பயன்படுத்தலாம் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 4 நாட்களாக மக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று வருகிறார்கள். ஏடிஎம் மூலமாகவும் மக்கள் பணம் பெற்று வருகிறார்கள். 5-வது நாளாக இன்றும் வங்கிகளில் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதற்கிடையே வங்கிகளிலும், ஏடிஎம் -களிலும் பணத்தின் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் ரூ.4000க்கு பதில் ரூ.4500 வரையும், ஏடிஎம் மையங்களில் ரூ.2,500 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ஏடிஎம் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
பழைய ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் 24-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்ததுள்ளது.