புதுடெல்லி: மத்திய அரசின் முடிவின் படி நேற்று நள்ளிரவு முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் எந்த இடத்திலும் செயல் படாது.
பழைய 500 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், பள்ளி கட்டணம் மற்றும் மத்திய அல்லது மாநில அரசு கல்லூரிகளில் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு இனி பயன்படாது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரையில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்கள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து, தங்களது கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் பெட்ரோல் பங்க், விமான டிக்கெட்டுகளுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு கடந்த டிசம்பர் 3-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தது நேற்று இரவு நள்ளிரவு உடல் பழைய 500 ரூபாய் வெளியே எங்கேயும் செயல் படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.