உத்தரப்பிரதேச தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதால், காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் அம்மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். ராகுல்காந்தி (Rahul Gandhi) தன்னுடைய முன்னாள் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
உண்மைக்காக குரல் எழுப்பும், நாங்கள் பயப்படவில்லை, நாங்கள் பயப்படவும் மாட்டோம். பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காவிட்டால், வீதியில் இறங்கி பேசுவோம். பாராளுமன்றத்தின் கண்ணியத்தை இழக்க விடமாட்டோம் என ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வினாத்தாளில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழிக்க ஆர்எஸ்எஸ் - பா.ஜ.க செய்யும் சூழ்ச்சி என விமர்சித்துள்ளார்.
எந்தவொரு நபரின் ஆளுமைச் சரிவும் சமரசத்துடன் தொடங்குகிறது, பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாபின் நலன் குறித்து சமரசம் செய்ய முடியாது! என்று சொன்ன காங்கிரஸின் சித்து சமரசம் ஆகிவிட்டார்...
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர், தனது கணக்கை 'லாக்' செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டது.
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்ட ர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியது.
விதிமுறைகளை மீறியதால் ராகுல் காந்தியின் பதிவை நீக்கிவிட்டோம். அதன்பிறகு அவரது கணக்கையும் முடக்கிவிட்டோம் என்று ட்விட்டர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது
புது டெல்லி: ராகுல் காந்தி ட்விட்டரில் பக்கத்தில், "ஒரு கவிதையுடன் விவசாயிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். கவிதையின் மூலம், அவர் பிரதமர் மோடியை விமர்சித்தும், விவசாயிகளுக்காக தான் நாங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் பெகாசஸ் விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில், பெகாசஸ் விவகாரம் "தேசிய பாதுகாப்பின் முக்கிய பிரச்சினை" என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக இஸ்ரேலிய பெகாசஸ் உளவு சாப்ட்வேர் பயன்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் "நாட்டின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பை அடுத்து, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக்கவும், மத்தியில் ஆட்சியை பிடிக்கவும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் எனத் தகவல்.
2019 தேர்தலில் பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக நியமிக்கலாம் என்ற யோசனையை அப்போது ராகுல் காந்தி நிராகரித்தார். ஆனால் இன்று ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். அன்றைய நிராகரிப்புக்கு காரணம் என்ன? இன்றைய சந்திப்புக்கு காரணம் என்ன?
Rising Unemployment: "இந்தமுறையும் கோடி பேர் வேலை இழந்துள்ளனர். அதற்கு யார் பொறுப்பு? எனக் கேள்வி எழுப்பியவர் ராகுல் காந்தி, வேலையின்மைக்கு காரணம் மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 4,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இது இந்தியாவில் முதன்முறையாக மிகவும் அதிகமான அளவு இறப்பு எண்ணிக்கையாகும். அதேபோல் ஒரு வாரத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.