புது டெல்லி: ஜம்மு -காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க ஆரம்பித்து இருக்கிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது. ஸ்ரீநகர் இட்காவில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். முன்னதாக செவ்வாய்க்கிழமை, பயங்கரவாதிகள் மூன்று பேரை கொன்றனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் பிரதமர் மோடியை குறிவைத்து கடுமையாக விமர்சித்து உள்ளார். அதாவது 56 இஞ்ச் மார்பு உள்ள தைரியமான ஆளுனு பெருமை பேசியவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர்களின் புகைப்படத்தையும் ட்வீட். மேலும் அதில் காஷ்மீரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுபிந்தர் கவுர் மற்றும் தீபக் சந்த் ஆகிய இரண்டு ஆசிரியர்களை பயங்கரவாதிகள் கொன்றது இதயத்தை நடிங்க வைத்துள்ளது. 56 அங்குல மார்பு எனக்கூறியவர்கள் ஏன் அமைதியாக இருக்கின்றன? எனப் பதிவிட்டுள்ளார்.
कश्मीर के सरकारी स्कूल के 2 शिक्षक सुपिन्दर कौर और दीपक चंद की आतंकियों द्वारा हत्या हृदय विदारक है। 56 इंच की छाती पीटने वाले खामोश क्यों हैं ? pic.twitter.com/OlQPozFaUx
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) October 7, 2021
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிக்கையும் முன் வந்துள்ளது. அவர் ட்விட்டரில், "காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் 370 வது பிரிவை ரத்து போன்ற செயல்களால் பயங்கரவாதம் ஒழிந்ததா.. இல்லை. பாதுகாப்பை வழங்குவதில் மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது. நமது காஷ்மீர் சகோதரர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
कश्मीर में हिंसा की घटनाएँ बढ़ती जा रही हैं। आतंकवाद ना तो नोटबंदी से रुका ना धारा 370 हटाने से- केंद्र सरकार सुरक्षा देने में पूरी तरह असफ़ल रही है।
हमारे कश्मीरी भाई-बहनों पर हो रहे इन हमलों की हम कड़ी निंदा करते हैं व मृतकों के परिवारों को शोक संवेदनाएँ भेजते हैं।#Kashmir
— Rahul Gandhi (@RahulGandhi) October 7, 2021
வியாழக்கிழமை காலை 11.15 மணியளவில் ஸ்ரீநகரில் உள்ள சங்க இட்காவில் இரண்டு பள்ளி ஆசிரியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் அலோச்சி பாக் பகுதியைச் சேர்ந்த சுபிந்தர் கவுர் மற்றும் ஜம்முவில் வசிக்கும் தீபக் சந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளின் ஆதிக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் எழுந்துள்ளன. சமீபத்தில், காஷ்மீர் பண்டிட் உட்பட 3 பேரை பயங்கரவாதிகள் கொன்றனர். அதன் பிறகு இந்த இரண்டு ஆசிரியர்களையும் கொன்றதன் மூலம், பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டதாக ஒரு செய்தியை அனுப்ப முயற்சிக்கின்றனர்.
போதைப்பொருள் வியாபாரி மகான் லால் பிந்த்ருவை தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை கொன்றனர். மகான் ஒரு காஷ்மீர் பண்டிட் மற்றும் காஷ்மீரை விட்டு வெளியேறும்படி பயங்கரவாதிகளால் பல முறை மிரட்டப்பட்டார். ஆனால் பிந்த்ரு காஷ்மீரை விட்டு போவததால், கோபமடைந்த பயங்கரவாதிகள் அவரை அவரது கடைக்கு வெளியே சுட்டுக்கொன்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR