3 மாநிலங்களில் ஆட்சி உறுதி - அடித்து சொல்லும் காங்., தலைவர்

கோவா, உத்தரக்காண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:09 PM IST
  • 4 மாநிலங்களில் பா.ஜ.க, காங்கிரஸ் உட்சக்கட்ட தேர்தல் பிரச்சாரம்
  • கோவா, உத்தரக்காண்ட், பஞ்சாப்பில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி
  • ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் நம்பிக்கை
3 மாநிலங்களில் ஆட்சி உறுதி - அடித்து சொல்லும் காங்., தலைவர் title=

இந்தியாவில் பஞ்சாப், உத்தரக்காண்ட், கோவா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து களப்பணியாற்றி வருகின்றன.  கோவா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரக்காண்ட் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க ஆளும் கட்சியாகவும், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆளும் கட்சியாகவும் உள்ளது. 

ALSO READ | Budget 2022: விவசாயிகளுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்பு!!

இந்நிலையில், 4 மாநில தேர்தல் குறித்து பேசிய ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட், கோவா, உத்தரக்காண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனக் கூறியுள்ள அவர், தேர்தலுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்

"உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் உண்மையான எதிர்கட்சிகளாக செயல்பட தவறவிட்டனர். லக்கிம்பூர், உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் உள்ளிட்ட பிரச்சனைகளில் அவர்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுடன் களத்தில் நின்று அவர்களுக்காக குரல் எழுப்பியது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அரசியல் விளையாட்டுகளை அரங்கேற்றுகின்றனர். ஆனால், இந்த தேர்தலில் அவர்களின் வியூகம் மக்களிடம் எடுபடாது.

ALSO READ | Budget 2022: மொபைலில் நேரலையாக பட்ஜெட் தாக்கலை பார்க்க புதிய app அறிமுகம்

ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜ.க இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கூறியது. அது இன்னும் நடக்கவில்லை. தேசிய அளவில் பா.ஜ.கவுக்கு மாற்றான ஒரே கட்சி காங்கிரஸ். எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், அதனை மனதில் வைத்து மக்கள் வாக்களிப்பார்கள்" எனவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News