பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேருவாரா? பிஜேபி-க்கு எதிராக மாஸ்டர் பிளான்?

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பை அடுத்து, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக்கவும், மத்தியில் ஆட்சியை பிடிக்கவும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் எனத் தகவல்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2021, 06:14 PM IST
  • சோனியா காந்தி கட்சியின் நிரந்தரத் தலைவராக ஆகக்கூடும் என்பதற்கான அறிகுறி.
  • 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடல்.
  • ராகுல் காந்தியை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக்கலாம்.
பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேருவாரா? பிஜேபி-க்கு எதிராக மாஸ்டர் பிளான்? title=

புது டெல்லி: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த பின்னர், அவர் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், சோனியா காந்தி கட்சியின் நிரந்தரத் தலைவராக ஆகக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் காங்கிரஸ் வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. நேற்று (செவ்வாய்க்கிழமை) ராகுல் காந்தி மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். செய்தி ஊடகம் வெளியிட்ட தகவலின் படிபடி, சோனியா காந்தியும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றார் எனக் கூறப்பட்டது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார் தேசிய அளவில் பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார். இது தொடர்பாக அவர் சில வாரங்களுக்கு முன்பு கிஷோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2024 மக்களவைத் தேர்தலுக்கான திட்டமிடல் :
பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பு வெறும் பஞ்சாப் அல்லது உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பற்றி அல்ல அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு மிகப் பெரிய திட்டத்துக்கான ஆரம்பம் என்றும், 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடலில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் எனக் கூறப்படுகிறது. 

ALSO READ | Prashant Kishor meets Congress leaders: பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் வியூகம் தொடங்கிவிட்டதா?

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர்?
இந்த சந்திப்பை அடுத்து, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பாஜகவுக்கு எதிராக வலிமையாக்கவும், மத்தியில் ஆட்சியை பிடிக்கவும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் பிரசாந்த் கிஷோர் இதற்கு முன்பு ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் சேர்ந்தார், பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவராகும் ராகுல் காந்தி:
காங்கிரஸ் வட்டாரங்களின்படி, ராகுல் காந்தியை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக்க முடியும். ஆதீர் ரஞ்சன் சவுத்ரிக்கு பதிலாக ராகுல் காந்திக்கு பொறுப்பு வழங்கப்படலாம் என்று கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகிறது. அதேபோல புதன்கிழமை மாலை சோனியா தலைமையில் ஒரு முக்கியம் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தி தொடர்ந்து ஒன்றிய அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா நெருக்கடியின் போது, ​​அவர் ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். 

ALSO READ | Prashant Kishor: அரசியலை தலைமுழுகிவிட்டேன், குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பேன்

ஒன்றிய அரசை தாக்கும் ராகுல்: 
இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார். "ஜும்லே ஹாய், வேக்சின் நஹி (வெறும் வாய் வாரத்தைதான், தடுப்பூசி இல்லை) என்று ட்வீட் செய்துள்ளார். பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதை மேற்கோள்காட்டி மோடி அரசை காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளார்.

 

அதேபோல மற்றொரு ட்வீட்டில், மோடி அரசு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையை "அரசியல் ஆக்குவது" மூலம் நம் நாட்டை பலவீனப்படுத்தியுள்ளார். இந்தியா ஒருபோதும் இவ்வளவு பாதுகாப்பற்றதாக இருந்ததில்லை" எனவும் பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News