KC Venugopal, Pegasus spyware : பெகாசஸ் மூலம் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் உளவுபார்க்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அதிநவீன ஸ்பைவேரால் ஆபத்து ஏற்படலாம் என்று கூகுள் எச்சரிக்கை: இந்த ஸ்பைவேர் இணைய சேவை வழங்குநர்களின் உதவியைப் பெறுகிறது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
உலகளவில் பெகாசஸ் விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில், பெகாசஸ் விவகாரம் "தேசிய பாதுகாப்பின் முக்கிய பிரச்சினை" என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
நேற்று பெகாசஸ் (pegasus) விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் பிரச்சினையில் அறிக்கையை வெளியிட அனுமதிக்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில், இன்று, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கையை கிழித்து எறிந்தார்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இஸ்ரேல் NSO நிறுவனத்தின் உளவு தொடர்பாக தொலைபேசி பதிவுகளின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது என்ற கூறிய நிலையில், இப்போது யு-டர்ன் எடுத்துள்ளது.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கண்காணிப்பு கருவிகளை இறக்குமதி செய்வதில் ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் காட்டும் வெறுப்பே, பெகாசஸ் பட்டியலில் ரஷ்ய பெயர்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஆண்ட்ரி சோல்டடோவ் கூறியுள்ளார்.
பெகாசஸ் ஸ்பைவேர் பயனர்களின் போனில் உள்ள செயலியின் செயல்பாட்டையும் கண்காணிக்கக்கூடும். இது மட்டுமல்லாமல், இது உங்கள் இருப்பிடம், தரவு மற்றும் வீடியோ கேமராவையும் எளிதாக அணுகிவிடும் திறன் கொண்டது.
பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான NSO உருவாக்கிய ஒரு செயலி (App). இது உளவு பணிகளுக்காகவே உருவாக்கப்பட்ட செயலி.
இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் மூலம் பிரதமர் மோடி உட்பட இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள், எதிர்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் செல்போன்கள் உளவு பார்க்கப் படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.