Pegasus Spyware: உளவு பார்க்கும் ஸ்பைவேர் குறித்த பகீர் தகவல்கள்

பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான NSO உருவாக்கிய ஒரு செயலி (App).  இது உளவு பணிகளுக்காகவே உருவாக்கப்பட்ட செயலி.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2021, 09:53 AM IST
Pegasus Spyware: உளவு பார்க்கும் ஸ்பைவேர் குறித்த பகீர் தகவல்கள் title=

Pegasus Spyware: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு பார்க்கும் மென்பொருள் பற்றிய செய்திகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  இந்தியாவைச் சேர்ந்த  முக்கிய அரசியல் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் போன்றோரின் தொலைபேசி எண்கள் கண்காணிக்கபட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 

பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான NSO உருவாக்கிய ஒரு செயலி (App).  இது உளவு பணிகளுக்காகவே உருவாக்கப்பட்ட செயலி. 

இந்த நவீன யுகத்தில், உங்கள் தரவுகள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியான விஷயம் தான். நீங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர் என்றால், ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள் அமேசான் ஆன் லைன் ஷாப்பிங்கில் ஏதேனும் ஒரு பொருளை வாங்குவது தொடர்பாக பொருட்களை தேடினால், அதன் பிறகு, நீங்கள் உங்கள் ஸ்மாட் போனில் பேஸ்புக் போன்ற பிற கணக்குகளில் உள்நுழையும் போது, அந்த பொருட்கள் சம்பந்தமான விளம்பரங்கள் உங்களுக்கு தோன்றும். அதாவது, உங்களின் விருப்பங்கள், தேர்வுகள் கண்காணிக்கப்படுகின்றன என்பது இதன் பொருள். 

ALSO READ | Pegasus Spyware-ன் இலக்கில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள்: பகீர் தகவல்

தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள பெகாசஸ் ஸ்பைவேர்  மூலம் ஒருவரின் செல்போனில்  நுழைந்து, சாதாரணமாக உளவு பார்க்க இயலும் என கூறப்படுகிறது. iOS மற்றும் ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட்போன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் நுழைந்தால், அந்த எஅந்த தொலைபேசியில் மேற்கொள்ளப்படும் போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும், அந்த தொலைபேசிக்கு வரும் குறுந்தகவல்களை படிக்கவும் முடியும்.

மேலும், தொலைபைபேசியின் GPS அமைப்பை தானாகவே இயக்கி, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என கண்காணிக்கவும் முடியும். அதோடு பெகாசஸ் ஸ்பைவேர்  நுழைந்த தொலைபேசியில் இருக்கும் கேமரா மற்றும் மைக்கை, அந்த குறிப்பிட்ட நபருக்கு தெரியாமலே இயக்கவும் முடியும் என கூறப்படுகிறது. End-to-end encryption (E2EE)  எனப்படும் குறியாக்கம் செய்த தகவலைக் கூட பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் படிக்க, பார்க்க இயலும். 

உளவு வேண்டிய செல்போனை ஊருவ, வலைத்தள இணைப்பு அனுப்படலாம். அது குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படலாம். அப்போது அந்த குறிப்பிட்ட நபர் அந்த லிங்க்கை க்ளிக் செய்ததும் அவரது ஸ்மார்போனில் பெகாசஸ் ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆகிவிடும். மேலும், வாட்ஸ்அப் அழைப்புகளில் உள்ள Bug  மூலமாகவும் ஊருவலாம். மிஸ்டு கால் மூலமாகவும், இந்த உளவு பார்க்கும் பெகாசஸ் ஸ்பைவேரை ஊடுருவச் செய்ய முடியும். 

ALSO READ: பாராளுமன்றம் இன்று கூடுகிறது; பிரச்சினைகளுடன் காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News