உத்தரப் பிரதேசத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் சீன் ஸ்பைசர் கூறியதாவது:- உத்தரப் பிரதேசத்தில் இந்திய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். மேலும் ட்ரம்ப் - மோடி இடையிலான உரையாடல் பின்னால் விவரமாக வெளியிடப்படும்" என்றார்.
ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு மோடியுடன் தொலைபேசி வாயிலாக நடத்தும் மூன்றாவது உரையாடல் இதுவாகும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 'துக்ளக் இதழ்'' 47-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துக்ளக் ஆண்டு விழாவில் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பொங்கல் நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தெரிவித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சூரிய கடவுளுக்கு நன்றி சொல்லும் விழாவே பொங்கல். இயற்கையோடு ஒன்றிணைந்த கலாச்சாரமே நமது நாட்டிற்கே வலுசேர்க்கிறது.
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கருப்பு பணம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ருபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த முடிவுக்கு பின்னல் ஒரு நபர் உள்ளதாக தகவல் வந்துள்ளது.
1931 ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தார் இவரது இயற் பெயர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராகவும் மற்றும் விண்வெளி பொறியாளராகவும் பணியாற்றினார். அவரது பிறந்த தினமான இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 85 வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் "மன் கி பாத்" நிகழ்ச்சி மூலம் ரேடியோ வாயிலாக மக்களுடன் பேசி வரும் பிரதமர் மோடி இன்று முதல் முறையாக பொது மக்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.
டில்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பொது மக்களின் கருத்துக்கள், அரசின் செயல்பாடுகள், அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பொது மக்களிடம் மோடி கேட்டறிய உள்ளார்.
சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் இருந்தே தங்களின் உரையை நிகழ்த்துவதே மரபாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக திறந்து அரங்கிலேயே தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தனது தான்சானியா பயணத்தை முடித்துக்கொண்டு இன்னொரு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடிக்கு கென்யாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் சங்கம் விஹார் பக்தியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ தினேஷ் மொஹனியா தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது மந்திரி மொஹானியாவை கைது செய்தனர்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "உடலும், உள்ளமும் நலமாக இருக்க ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை தங்கள் வாழ்க்கையின் அங்கமாகக் கொள்ள வேண்டும்" என்றார். மேலும், "உங்கள் வாழ்வில் செல்போன் நீங்கா இடம் பெற்றுள்ளது போல் யோகாவும் இடம்பெற வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் நலன் சீரடையும்" என்றார்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை மறு ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிஆயோக், நிதித்துறை, வர்த்தக துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என ஆறு காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இதற்கு முன்பு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுருந்தார் சுப்பிரமணியன் சுவாமி அதில் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார், எனவே ரிசர்வ்
வங்கி ஆளுநர் பொறுப்பில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.