யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கம் திறந்து வைத்தார் மோடி

Last Updated : Jun 18, 2016, 11:26 AM IST
யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கம் திறந்து வைத்தார் மோடி title=

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த விளையாட்டு அரங்கத்தை ரூ.7 கோடி செலவில் இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்ட துரையப்பா விளையாட்டு அரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் இன்று கூட்டாக சேர்ந்து இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்தனர். புதுடெல்லியில் இருந்தபடியே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி மூலம் இந்த விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுச்செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு அரங்கில் முதல் நிகழ்ச்சியாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட  உள்ளது.

 

 

Trending News