பொது மக்களுடன் நேரடியாக பேசும் மோடி

Last Updated : Aug 6, 2016, 12:56 PM IST
பொது மக்களுடன் நேரடியாக பேசும் மோடி title=

மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் "மன் கி பாத்" நிகழ்ச்சி மூலம் ரேடியோ வாயிலாக மக்களுடன் பேசி வரும் பிரதமர் மோடி இன்று முதல் முறையாக பொது மக்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.

டில்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பொது மக்களின் கருத்துக்கள், அரசின் செயல்பாடுகள், அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பொது மக்களிடம் மோடி கேட்டறிய உள்ளார். 

சமீபத்தில் மோடியை நேரடியாக மக்கள் தொடர்பு கொள்வதற்காக "மை கவர்மென்ட்" என்ற மொபைல் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப்சை தொடர்ந்து பயன்படுத்தும் மக்கள், மோடியை இன்று நேரடியாக சந்தித்து தங்களின் கருத்தை தெரிவிப்பதற்காகவும், பிரதமருடன் ஆலோசனை நடத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மை கவர்மென்ட் ஆப்ஸ் பயன்படுத்துவோர் கலந்து கொண்டு பிரதமர் மோடியிடம் தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் கேட்கலாம். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

Trending News