யோகா பயில்வதால் முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும் : பிரதமர் மோடி

Last Updated : Jun 21, 2016, 11:20 AM IST
யோகா பயில்வதால் முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும் : பிரதமர் மோடி title=

உலக யோகா தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "உடலும், உள்ளமும் நலமாக இருக்க ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை தங்கள் வாழ்க்கையின் அங்கமாகக் கொள்ள வேண்டும்" என்றார். மேலும், "உங்கள் வாழ்வில் செல்போன் நீங்கா இடம் பெற்றுள்ளது போல் யோகாவும் இடம்பெற வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் நலன் சீரடையும்" என்றார் 

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின்பேரில், ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா. அறிவித்தது. முதலாவது யோகா தினம் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. 2-வது யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள கேபிடல் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக சிறு உரையாற்றிய அவர், "உடலும், உள்ளமும் நலமாக இருக்க ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை தங்கள் வாழ்க்கையின் அங்கமாகக் கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்வில் செல்போன் நீங்கா இடம் பெற்றுள்ளது போல் யோகாவும் இடம்பெற வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் நலன் சீரடையும். உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவதற்காக மட்டுமல்ல, யோகா பயில்வதால் முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

Trending News