இந்தியாவின் பிரதமரான மோடி மற்றும் பாஜக கட்சி மக்கள் மத்தியில் மிக செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
நவம்பர் 16-ம் தேதி இன்று தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில்,
வரும் நவம்பர் 9ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் ஏழைகளுக்கு வழங்கிய 57,000 கோடி ரூபாய் மானியத்தை தவறாக பயன்படுத்தப்பட்டது. மானியங்கள் என்ற பெயரில் கருவூலத்தைத் திருடுவதற்கு மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய இராணுவம் மற்றும் பி.எஸ்.எப் ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியை கொண்டாடினார்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்!
வீரர்களுடன் பேசிய பிரதமர், தான் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட விரும்பியதால், தன் குடும்பமான இந்திய இராணுவ வீரர்களை சந்திக்க வந்ததாக அவர் தெரிவித்தார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்காக ஒரு கோயில் கட்டப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநில பொதுப்பணித்துறையான நீர்ப்பாசனத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜே.பி.சிங், இந்த கோயிலை கட்டுகிறார். இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் ஆவார். மோடியின் கோயிலை குறித்து அவர் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வைகையினில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தினில் அவருக்கு வாழ்த்து செய்தியினை பதிவிட்டுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டம் குறித்த கிரிக்கெட் வீரர் சச்சினின் கருத்தினை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்!
”இந்தாயாவை தூய்மைப் படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடைமை, எனவே நான் இனி ஒரு சிறு குழு அமைத்து அதற்கான பணிகளைத் துவங்குவோம்” என சச்சின் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி அவர்களின் 145-வது பிறந்த நாளான அக் 2, 2014 -ஆம் நாள் தூய்மை இந்தியா திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் பலரையும் தூதர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும் பிரபங்கள் பலரும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தும் வகையினில் தங்களது சமுக வலைத்தளங்கள் மூலமும் பல பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) வருகை புரிந்தார்.
முன்னதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் உணவு முகாம்கள் நடத்தப்படுவதாக உறுதிபடுத்தியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இன்று கைகோர்க்கும் ஓ. பன்னிர்செல்வம் மற்றும் இதர உறுப்பினர்களுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
I congratulate Thiru O Panneerselvam & others who took oath today. I hope Tamil Nadu scales newer heights of progress in the years to come.
— Narendra Modi (@narendramodi) August 21, 2017
ஜிஎஸ்டி குறித்து நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது. இந்த வரி குறித்து மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. ஜிஎஸ்டி பலன்கள் தெளிவாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வர இருக்கும் அநீதியான சட்டத்தை திரும்பப் பெற அழுத்தம் தர வேண்டும் என்று மத்திய அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
உலக புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நடந்து சென்றவர்கள் மீது வேனை மோத செய்தும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது.
இந்நிலையில் லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்ட செய்தி:-
பாஜக-வுடன் எப்போது கூட்டணி வைக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து அறிவிப்போம் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை பயணம் குறித்து டிவிட்டரில் தமிழில் டிவிட் செய்துள்ளார்.
இலங்கையில், வெசாக் தினத்தையொட்டி நடக்கும் கொண்டாட்டங்களில், தலைமை விருந்தினராக பங்கேற்க, பிரதமர் மோடி இன்று விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு செல்கிறார்.
இலங்கையில் மோடி, டிகோயா நகரில், அமைக்கப்பட்டுள்ள, 150 படுக்கைகள் உடைய மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இந்த மருத்துவமனை கட்டுவதற்கான நிதியை, நம் அரசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது இலங்கை பயணம் குறித்து டிவிட்டரில் தமிழில் பதிவி:-
புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் நிதி ஆயோக்கின் 3வது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி:- அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல் அமைச்சர்களின் கூட்டு முயற்சிகளாலேயே புதிய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வை புலப்படும்.
ஜிஎஸ்டி-க்கான கருத்தொற்றுமை கூட்டாட்சிக்கான பெரிய கல்வெட்டாக வரலாற்றில் இடம்பெறும்.
ஒரே தேசம், ஒரே நோக்கம், ஒரே தீர்மானம் என்ற உணர்வை ஜி.எஸ்.டி. பிரதிபலிக்கிறது. அதுபற்றிய விவாதம் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.