கடந்த 1-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சில
தினங்களுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பிய கருணாநிதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தலைவர் கருணாநிதி சளித் தொல்லை மற்றும் ஒவ்வாமை காரணமாக நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் சீராக முன்னேற்றம் பெற்றுள்ளது.
கடந்த 1-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சில தினங்களுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பிய கருணாநிதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தலைவர் கருணாநிதி சளித் தொல்லை மற்றும் ஒவ்வாமை காரணமாக நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நடந்து முடிந்த 3 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் அதன் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி பணநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை, ஏழை மக்கள், சிறுவணிகர் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது டிவிட்டார் பக்கத்தில் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மதிமுக நிறுவனர் வைகோ ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
மு.க.ஸ்டாலின்தான் தனது அரசியல் வாரிசு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
விகடன் வார இதழுக்கு கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்களை பார்ப்போம்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. இதில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் நரசிம்மன், “முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசி னார்.இதற்கு தி.மு.க. உறுப் பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே சபாநாயகர் குறுக்கிட்டு: தி.மு.க. உறுப்\பினரின் பெயரை மாண்புமிகு கருணாநிதி என்று மரியாதையுடன்தான் குறிப்பிட்டார். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.
உடனே துரைமுருகன் எழுந்து: முதல்-அமைச்சர் பெயரை நாங்கள் குறிப்பிட்டு பேசலாமா? என்றார்.
ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக் கொண்டு கச்சத்தீவு விவகாரத்தில் என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கச்சத்தீவு பற்றி தமிழக சட்டப் பேரவையில் நேற்றைய தினம் பிரச்சினை ஏற்பட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத்தீவு பற்றிப் பேச திமுக -வுக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக பேசினார்.
நாளை சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் கருணாநிதி தலைமையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றவுள்ளது.
இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்கின்றனர். திமுகவின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சட்டப் பேரவையில் எப்படி செயல்பட வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேச உள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று 93-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத் துறை, நீதித் துறை ,நிர்வாகத் துறை மற்றும் பத்திரிகைகள் துறை என நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தூண்கள் எத்தகைய தூய்மையான நோக்கத்தை தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி சவால்களை எதிர்நோக்கி உள்ளன.
தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் கருணாநிதி ''திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விடலாம்'' என்று நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போய் விட்டார்கள் என்று கூறினார். ''திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தோற்காது, தோற்கப் போவதுமில்லை''.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்துள்ளன. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நடந்த திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 98 இடங்கள் வென்ற தி.மு.க. எதிர் கட்சியாக செயல்படும்.
தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 174 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகளின் 7 வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
திருவாரூர் தொகுதியில் போட்டிட்ட திமுக முதலைமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 68,366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,21,473 ஆகும்.
இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 53,107 வாக்குகள் பெற்றுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
திமுகவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தாக்குதல்.
திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் "மக்களின் செழிப்புக்கு எதிரான வாக்கு" எனவும் கூறினார்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மாநில நதிநீர் பிரச்சினை மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் எந்தவித முன்னேற்றம் திமுக செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
என்.டி.டி.வி தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த பேட்டியில் நடக்க இருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் 6-வது முறையாக நானே முதல்வராக பதவி ஏற்பேன்.
இதைதான் ஸ்டாலின் விரும்புகிறார். அவர்க்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வர் பதவில் அமர்வார்.
கருணாநிதி பின்பு ஸ்டாலின் முதல்வராவர் என கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.