கேக் சாப்பிடும் ஆசையே போச்சு! இந்த கேக் மேக்கிங் வீடியோவை பார்த்தால் உங்களுக்கும் போயிடும்..

Cake Making Viral Video : கேக் செய்யும் வீடியோ ஒன்று, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  இதைப்பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சிடைந்துள்ளனர்.  

Written by - Yuvashree | Last Updated : Dec 24, 2024, 06:20 PM IST
  • கேக் செய்யும் வீடியோ..
  • இத பாத்தா சாப்பிடும் ஆசையே போய்ரும்..
  • கண்டிப்பா பாருங்க..
கேக் சாப்பிடும் ஆசையே போச்சு! இந்த கேக் மேக்கிங் வீடியோவை பார்த்தால் உங்களுக்கும் போயிடும்.. title=

Cake Making Viral Video : 2024ஆம் வருடம் ஆரம்பித்து பொங்கல் முடிந்து, தீபாவளி முடிந்து, இப்போது வருட இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையே வரப்போகிறது. இந்த நாளை நினைத்தவுடன் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது மூன்று விஷயம். ஒன்று, சாண்டா தாத்தா, இரண்டு பரிசுகள், மூன்றாவது கேக். கிறிஸ்துமஸை விமர்சையாக கொண்டாட வேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் இல்லத்திலேயே கேக் செய்து அல்லது வெளியில் ஆர்டர் செய்து கேக் வாங்கி, அதை வெட்டி மகிழ்வர். இன்னும் சிலர், அக்கம் பக்கத்தினருக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஃப்ரூட் கேக்கை தனித்தனியாக ஆர்டர் செய்வர். நம்மில் பலருக்கு இந்த ஃப்ரூட் கேக் என்பது பிடித்ததாக இருக்கும். இன்னும் சிலர், இதனை தங்கள் விருப்ப பட்டியலிலேயே சேர்த்து வைத்திருப்பர். அப்படிப்பட்டவர்களுக்காகவே ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ:

நாம் சாப்பிடும் பல கடை உணவுகள் சுத்தமாக செய்யப்படுவதில்லை என்பது நமக்கே தெரியும். இருப்பினும், “இருந்தா இருந்துட்டு பாேகுது” என்ற எண்ணத்துடன் நாம் அதனை கடைகளில் வாங்கி சாப்பிட பழகியிருப்போம். ஆனால், ஒரு முறை அந்த கடையில் மேற்கொள்ளப்படும் செய்முறையை பார்த்துவிட்டால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட வீடியோக்களுள் ஒன்றுதான் இது.

இந்த வீடியோவில் முதலில் அகலமாக ஒரு ஆள் அமரும் அளவிற்கான கடாயில் 7 பெரிய பாக்கெட் அளவிற்கு வெண்ணையை கொட்டுகின்றனர். பின்னர் ஒரு பை நிறைய சர்க்கரையை கொட்டுகின்றனர். அதற்கு மேல் எண்ணிக்கையே இல்லாமல் முட்டையை உடைத்து ஊத்துகின்றனர். இதை ஒரு பக்கம் ஒரு நபர் கிளறிகொண்டே இருக்கிறார்.  இது ஓரளவிற்கு கெட்டியாகிறது. அதர்கு மேல் செரி, சில பழங்கள் என அனைத்தையும் கொட்டுகின்றனர். இறுதியில் மாவையும் சேர்த்து கொட்டுகின்றனர். இந்த மாவை கொட்டிய பிறகு 2 பேர் சேர்ந்து அந்த கேக் மாவை கிளருகின்றனர். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kamalesh (@kam.alesh98)

இறுதியில் அதை உண்டை பிடித்து கேக் செய்யும் தட்டில் வைத்து அவனில் வைக்கின்றனர். கேக்கும் வெந்து வெளியில் வருகிறது. இப்படி, கேக் விரும்பிகளுக்கு, அதை சாப்பிடும் ஆசையே போய் விடும் அளவிற்கு இதனை செய்கின்றனர். 

நெட்டிசன்களின் கருத்து..

மேலே இருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், இவர்கள் மிகவும் ‘சுத்தமாக’ சமைப்பதாக நக்கலாக கமெண்ட் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர், “வீட்டில் எல்லாம் இப்படித்தானே சமைப்போம், இப்போது மட்டும் என்ன அனைவரும் சுத்தம் இல்லை என கூறுகிறீர்கள்” என பிறரிடம் சண்டையிட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் சமயத்தில் இப்படியொரு வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள்.. இனி பானி பூரி வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க

மேலும் படிக்க | சாக்லெட்டுக்கு நடுவில் சிக்கன் டிக்கா மசாலா! வாந்தி வரும் காம்பினேஷன்-வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News