நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்துள்ளன. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நடந்த திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயதாகிவிட்டால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாது. தேர்தலுக்கு முன்பே திமுக தொண்டர்கள் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் விருப்பப்பட்டனர். எனவே தற்போது மு.க.ஸ்டாலின் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் அவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகி விட்டது. தொண்டர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
மேலும் துணைத்தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணைக் கொறடாவாக கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2011 சட்டப்பேரவைத் 29 இடங்களில் வென்ற விஜயகாந்த்தின் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.