January 30, 2021: இந்தியா உட்பட உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த முக்கியச் செய்திகள் இவை... ஆயிரக்கணக்கான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ள சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
மரத்தால் செயற்கைக்கோளை உருவாக்க முடியுமா? முயற்சி திருவினையாக்கும் என்கிறது ஜப்பான். மரங்களையே போன்சாயாக மாற்றிய ஜப்பான் காலத்திற்கு ஏற்ப தனது கோணத்தை மாற்றி யோசிக்கிறது.
ஜப்பான் விஞ்ஞானிகள் கருப்பு தங்கம் தொடர்பான ஆராய்ச்சியை முடித்த பின்னர் இந்த மாதிரிகள் கூடுதல் சோதனைக்காக நாசா மற்றும் பிற சர்வதேச விண்வெளி ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்படும்.
இந்தியாவில் PUBG ஐ இந்தியா தடை செய்திருந்தாலும், இந்தியாவில் PUBG Mobile India விளையாட்டு செயலி எப்போது தொடங்கப்படுகிறது என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. ஆனால், பிரபலமான யுத்த விளையாட்டுகளுக்கான ஆவல் துளி கூட குறையவில்லை.
அனைத்து சிக்கல்களுக்கும் நகைச்சுவையாகவும், இயல்பாகவும் தீர்வுகளை எடுப்பதற்கு பெயர் பெற்றது ஜப்பான். ஜப்பானில் உள்ள ஒரு நகரம் ரோபோ ஓநாய்களை வேலைக்கு வைத்துள்ளது. இதை விளையாட்டுக்காக சொல்லவில்லை, உண்மையில் நடைபெறும் உத்தி. கரடிகளை பயமுறுத்துவதற்காக ரோபோ ஓநாய்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ஜப்பானில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்க்கு கரடிகள் மிகவும் ஆபத்தானதாகவும், தொல்லை கொடுப்பதாகவும் மாறிவிட்டன.
பார்ப்பதற்கே பரவசமூட்டும் விளையாட்டுகளில் ஒன்று ஜிம்னாஸ்டிக். உடலும், மனமும் ஒன்றிணைந்தால் இந்தக் கலை கைவந்தக் கலை, இல்லாவிட்டால் இது கை நழுவிப் போக்கும். ஜிம்னாஸ்டிக் விளையாட்டின் சில முக்கிய காட்சிகள் புகைப்படத் தொகுப்பாக...
தெற்கு ஜப்பானிய நகரமான கிடாக்யுஷு (Kitakyushu) 2021ஆம் ஆண்டுக்கான Artistic and Rhythmic ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவிருக்கிறது என்று இன்டர்நேஷனல் ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு (Federation Internationale de Gymnastique (FIG)) ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்தது, ஒரே ஆண்டில் இரண்டு உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிகளையும் ஒரு நகரம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
“Big Tech” நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஜப்பான் இணைய வாய்ப்புள்ளது என்ற செய்தி அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்கிறது.
1992 ஆம் ஆண்டில், இந்தியா - அமெரிக்கா கடற்படைகளின் இருதரப்பு கூட்டு பயிற்சியான மலபார் பயிற்சி தொடங்கியது. 2015-ம் ஆண்டு இந்த கூட்டணியில் ஜப்பான் இணைந்தது. சில காலங்களாகவே ஆஸ்திரேலியாவும் இதில் இணைய விருப்பம் தெரிவித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு சீனக் கப்பல்கள் ஜப்பானின் உரிமை கோரப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து ஒரு மீன்பிடி ஜப்பானிய படகை அணுக முயற்சித்தன என்று ஜப்பானிய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை மேலும் மேம்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
ஜப்பானில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஒரு நாடாளுமன்ற அமர்வை நடத்த ஜப்பான் முடிவு செய்துள்ளதாக ஜப்பான் ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.