Japan: தொழில்நுட்ப நிறுவனங்கள் விஷயத்தில் அமெரிக்காவை பின்பற்றுகிறதா!!

“Big Tech” நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஜப்பான் இணைய வாய்ப்புள்ளது என்ற செய்தி அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 10:04 PM IST
Japan: தொழில்நுட்ப நிறுவனங்கள் விஷயத்தில் அமெரிக்காவை பின்பற்றுகிறதா!!  title=

“Big Tech” நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஜப்பான் இணைய வாய்ப்புள்ளது என்ற செய்தி அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்கிறது.

ஜப்பானின் Fair Trade Commission (FTC) தலைவர் கசுயுகி ஃபுருயா (Kazuyuki Furuya) இதுபற்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, ஃபிட்நெஸ் டிராக்கர் நிறுவனமான Fitbit-இன் இணைப்பு மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணையையும் தொடங்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.  

எந்தவொரு நிறுவனங்களின் இணைப்பும் இதற்கு முன்பு இல்லாத புது மாதிரியாக இருந்தால், அது தொடர்பான  விசாரணைகளையும் தொடங்க ஜப்பான் விரும்புகிறது.

"எந்தவொரு இணைப்பு அல்லது வணிக இணைப்பின் அளவும் பெரியதாக இருந்தாலும், ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வாங்குபவதற்கான செயல்முறையாக இருந்தாலும், அதில் அழுத்தமோ, முறைகேடோ நடந்திருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக விசாரணையை நாங்கள் தொடங்கலாம்" என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
 
உலகில், குறிப்பாக ஐரோப்பாவில் இதேபோன்ற நகர்வுகளை ஜப்பான் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் மேலும் கூறினார். "ஐரோப்பா உள்ளிட்ட முன்னேற்றங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2020 இல், ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் (European Union regulators) கூகுள் மற்றும் ஃபிட்பிட் இடையே சாத்தியமான ஒப்பந்தம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங்கை எதிர்கொள்ள ஆல்பாபெட்டின் கூகுள் 2.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டது.

இதன் பிறகு, GAFA, அல்லது கூகுள், ஆப்பிள், பேஸ்புக், அமேசான் ஆகிய நான்கு பிக் டெக் நிறுவனங்களால் சந்தையில் முறைகேடுகளை திறம்பட செய்ய முடியும் என்பதால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அவற்றின் வர்த்த இணைப்புகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

உலகளவில் GAFA நிறுவனங்கள் இதேபோன்ற வணிக நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றும், உலகளாவிய ஒருங்கிணைப்பு "முக்கியமானவை" என்றும் Furuya ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

world news | இன்றைய செய்திகளில் முக்கிய இடத்தை பிடித்த உலக நடப்புகள் 22, October 2020

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News