மேற்கு ஜப்பானிய நகரமான ஒசாக்காவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, 19 ஆம் நூற்றாண்டில் ஒரே நேரத்தில் புதைக்கப்பட்டதாக 1,500 க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக் கூடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஒரு தொற்றுநோய் தொடர்பான மரணங்கள் காரணமாக இவர்கள் இறந்திருக்கிறார்கள் என்றும், இவர்கள் அனைவரும் ஒரே புதைக்கப்பட்டதாக அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஒசாக்காவில் நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கான அகழ்வாராய்ச்சியின் போது உமேடா கல்லறை என்று பெயரிடப்பட்ட பொது மக்களுக்கான கல்லறை தோண்டப்பட்டது.
ஒசாகா நகர கலாச்சார துறை அதிகாரிகள், இந்த எலும்புக்கூடுகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்கள் 1800 களின் பிற்பகுதியில் இறந்த இளைஞர்கள் என்று நம்பப்படுவதாக கூறினார். சிலர் கைகளிலும் கால்களிலும் நோயின் அறிகுறிகள் இருந்ததாக எலும்புகள் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
"இது ஒசாக்காவில் ஒரு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாங்கள் கண்டுபிடித்த முதல் வரலாற்று கண்டுபிடிப்பு என கூறலாம். இதன் மீது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முந்தைய அகழ்வாராய்ச்சியைப் போலவே, சிலரின் எலும்புகளில், குறிப்பாக, கைகள் மற்றும் கால்களில் உள்ள எலும்புகளில், புண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பல எலும்புகளில், இதே போன்ற அறிகுறிகள் காணப்படுவதால் இப்பகுதியில் ஒரு தொற்றுநோய் ஏற்பட்டு, அதில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது”என்று சங்கத்தின் அதிகாரி யோஜி ஹிராட்டா கூறினார்.
ALSO READ | வட கொரியாவில் கண்ணாமூச்சி ரே ரே Part 2: கிம்மின் சகோதரி எங்கே?
அகழ்வாராய்ச்சி இடத்திலிருந்த எலும்புகள் அகற்றப்பட்டுள்ளன, மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, இறப்பதற்கான காரணம் குறித்து மேலும் பல விபரங்களை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சில வல்லுநர்கள் சருமத்தில் ஏற்படும் சிபிலிஸ் என்னும் தொற்றுநோய் ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறு இருப்பதை மேற்கோள் காட்டியுள்ளனர். இந்த தொற்று நோய் ஒசாகா போன்ற மக்கள் தொகை அதிகம் இருந்த பகுதிகளில் பரவலாக காணப்பட்டது.
ALSO READ | ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா வருமா? இங்கெல்லாம் வந்துடுச்சு!!