2021 ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஸ் போட்டியை நடத்துகிறது ஜப்பானின் Kitakyushu - FIG

தெற்கு ஜப்பானிய நகரமான கிடாக்யுஷு (Kitakyushu) 2021ஆம் ஆண்டுக்கான Artistic and Rhythmic ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவிருக்கிறது என்று இன்டர்நேஷனல் ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு (Federation Internationale de Gymnastique (FIG)) ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்தது, ஒரே ஆண்டில் இரண்டு உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிகளையும் ஒரு நகரம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 8, 2020, 11:18 PM IST
  • artistic ஜிம்னாஸ்டிக் போட்டியை நடத்துவதில் இருந்து ஜூலை மாதம் டென்மார்க் விலகியது
  • ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் Artistic Gymnastics போட்டிகள், 2021 அக்டோபர் 17 முதல் 24 வரை நடைபெறும்
  • அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு rhythmic ஜிம்னாஸ்டிக் போட்டி தொடங்கும்.
2021 ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஸ் போட்டியை நடத்துகிறது ஜப்பானின் Kitakyushu - FIG title=

தெற்கு ஜப்பானிய நகரமான கிடாக்யுஷு (Kitakyushu) 2021ஆம் ஆண்டுக்கான Artistic and Rhythmic ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவிருக்கிறது என்று இன்டர்நேஷனல் ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு (Federation Internationale de Gymnastique (FIG)) ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்தது, ஒரே ஆண்டில் இரண்டு உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிகளையும் ஒரு நகரம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் Artistic Gymnastics போட்டிகள், 2021 அக்டோபர் 17 முதல் 24 வரை நடைபெறும், அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு rhythmic ஜிம்னாஸ்டிக் போட்டி தொடங்குகிறது.

artistic ஜிம்னாஸ்டிக் போட்டியை நடத்துவதில் இருந்து ஜூலை மாதம் டென்மார்க் (Denmark) விலகிய பின்னர், 2021 உலக சாம்பியன்ஷிப் எங்கு நடத்தப்படும் என்ற கேள்விகள் எழுந்தன. தற்போது அதற்கான பதில் கிடைத்துவிட்டது.

ஜிம்னாஸ்டிக் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஆண்டுகளில் மட்டும் நடைபெறாது.

டோக்கியோவில் நடைபெற்ற ஒரு நட்பு ஜிம்னாஸ்டிக் நிகழ்வில் FIG இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிகழ்வில் ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர்கள் கலந்துக் கொண்டனர. இந்த போட்டியானது, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெறும் பெரிய சோதனை ஓட்டமாகக் கருதப்படுகிறது.

ஜப்பான் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப்பை நடத்தியிருக்கிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டுக்கான artistic competition டோக்கியோவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News