Corona-வில் இருந்து முக்தி பெற பனிக்குளியல் நடத்தும் ஜப்பானியர்கள்

ஜப்பானின் டோக்கியோ நகரில் இதுபோன்ற மத நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

 

இந்த முறை ஷின்சோவில் மத நிகழ்வில் ஒன்று கூடி பிரார்தித்த மக்கள் கொரோனா தொற்றுநோயிலிருந்து விடுபட வேண்டிக் கொண்டனர்.
நடுக்கும் பனியில் இடுப்பில் கோமணம் மட்டுமே ஆடை. வாயில் முகக்கவசம் அணிந்து வாட்டி வதைக்கும் பனியில் பிரார்த்தனை செய்தனர் ஜப்பானியர்கள்.

Also Read | அதிக பனிப்பொழிவால் அண்டார்டிகாவைப் போல் மாறிய Madrid

1 /5

கொரோனா தொற்றுநோயிலிருந்து முக்தி கிடைக்க பிரார்த்தனை ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில், வருடாந்திர ஷின்சோ சடங்கின் ஒரு பகுதியாக மக்கள் பனியால் உறைந்திருக்கும் நீரில் குளித்தனர். இதுபோன்ற மத நிகழ்வு டோக்கியோவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது, இந்த முறை ஷின்சோவில் மக்கள் கொரோனா தொற்றுநோயிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்தனர். (Photos Courtesy: Reuters)

2 /5

குளிக்கும் போது கூட முகக்கவசம் அணிந்திருந்தனர்   கொரோனா தொற்றுநோயிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்ய வந்த மக்கள் முகக் கவசங்களை அணிந்திருந்தனர். ஷின்சோ சடங்கில் ஒரு சிலரே பங்கேற்கிறார்கள். இது டோக்கியோவில் உள்ள தப்போஜு இனாரி கோவிலில் நடைபெற்றது.

3 /5

முதலில் பிரார்த்தனை, பின்னர் குளியல் பனியால் உறைந்திருக்கும் நீரில் குளிப்பதற்கு முன் மக்கள் முதலில் மந்திரங்களை ஜெபித்தனர். இந்த முறை கொரோனா தொற்றுநோயிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த பனிப் பிரார்த்தனை நடைபெற்றபோது டோக்கியோவில் வெப்பநிலை 5.1 டிகிரி செல்சியஸ். இந்த மத நிகழ்வில் 3 பெண்கள் உட்பட 12 பேர் பங்கேற்றனர்.

4 /5

உலக மேம்பாட்டிற்காக பிரார்த்தனை ஷின்சோ சடங்கை வழிநடத்தும் ஷின்ஜி ஓய், இந்த நேரத்தில் முழு உலகத்தின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாகக் கூறினார். கொரோனா தொற்றுநோய் விரைவில் முடிவடைந்து, மக்கள் மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார்..  

5 /5

டோக்கியோவில் எமர்ஜென்சி அறிவிப்பு ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பபி கருத்தில் கொண்டு   அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.