பார்ப்பதற்கே பரவசமூட்டும் விளையாட்டுகளில் ஒன்று ஜிம்னாஸ்டிக். உடலும், மனமும் ஒன்றிணைந்தால் இந்தக் கலை கைவந்தக் கலை, இல்லாவிட்டால் இது கை நழுவிப் போக்கும். ஜிம்னாஸ்டிக் விளையாட்டின் சில முக்கிய காட்சிகள் புகைப்படத் தொகுப்பாக...
ஜிம்னாஸ்டிக் விளையாட்டு என்பது உடற்தகுதியை அடிப்படையாகக் கொண்டது. வலிமை, சுறுசுறுப்பு, ஒருங்கியக்கம் ஆகியவை கூட்டாக தேவைப்படும் உடற்பயிற்சி செயல்திறன்களைக் குறிக்கிறது.
ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர்கள் கலந்துக் கொண்டன.நட்பு ஜிம்னாஸ்டிக் போட்டியானது, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெறும் பெரிய சோதனை ஓட்டமாகக் கருதப்படுகிறது
டோக்கியோவில் நடைபெற்ற ஒரு நட்பு ஜிம்னாஸ்டிக் நிகழ்வில் FIG இந்த அறிவிப்பை வெளியிட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் Artistic and Rhythmic ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் தெற்கு ஜப்பானிய நகரமான கிடாக்யுஷு (Kitakyushu)வில் நடைபெறவிருக்கிறது.
உலக அளவில் பிரசித்தி பெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும்.ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஆண்டுகளில் மட்டும் நடைபெறாது.