அயோடின் அடிப்படையிலான கை சுத்திகரிப்பு மருந்துகளை (Iodine based Sanitisers) வெளியிடப்போகும் உலகின் முதல் நாடாகப்போகிறது இந்தியா. தற்போது, ஆல்கஹால் சார்ந்த சானிடிசர்கள் உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ளன. அயோடின் அடிப்படையிலான சானிடிசர்களுடன், இந்தியா அத்தகைய பொருட்களின் உற்பத்தி மையமாக மாறும்.
பிசினஸ்லைனின் படி, முதல் அயோடின் அடிப்படையிலான சானிடிசர் I2Cure என்று அழைக்கப்படும். மேலும் இது சிங்கப்பூரைச் சேர்ந்த பயோடெக்னாலிஜி நிறுவனமான I2Pure ஆல் தயாரிக்கப்படும். இந்த நிறுவனம் அயோடின் அடிப்படையிலான தயாரிப்பு தொடர்பான காப்புரிமைகளைக் கொண்டுள்ளது.
அயோடின் (Iodine) அடிப்படையிலான சானிடிசர்கள் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களைக் காட்டிலும் மேலானவையாகும். ஏனென்றால் அவை வைரஸ்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ளவையாகவும், நீண்ட காலத்திற்கு நீடிக்கத்தக்கவையாகவும் இருக்கும்.
இந்த தயாரிப்புகள் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அயோடின் சிறந்த கிருமிநாசினி பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது ஒரு மிகச்சிறந்த ஆண்டிசெப்டிக் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சானிடைசர் (Sanitiser) உற்பத்தியில் இருந்த சில அடிப்படை குறைப்பாடுகள் அமெரிக்க விஞ்ஞானி ஜாக் கெஸ்லர் மேற்கொண்ட ஆராய்ச்சியால் தீர்க்கப்பட்டன.
ALSO READ: Skin Cancer சிகிச்சையில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் அடைந்த மாபெரும் வெற்றி!!
I2Pure இன் உலகளாவிய தலைவர் அனில் கெஜ்ரிவால் பிசினஸ்லைனிடம் அயோடின் அடிப்படையிலான சானிடைசர் “கொரோனா வைரஸுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார். நிறுவனம் இந்த சானிடைசருக்கு "அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை" பெற விரும்புகிறது.
சில மணிநேரங்களுக்கு ஒருமுறை உபயோகிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ள ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களைப் (Alcohol Santitisers) போலல்லாமல், அயோடின் அடிப்படையிலான சானிடைசர் சுமார் 12 மணி நேரம் பாதுகாப்பை வழங்கும் திறன் கொண்டது என்றும் நிறுவனத்தின் தலைவர் கூறினார். மேலும், ஒரு பயன்பாட்டிற்கு தேவையான அளவு இரண்டு சொட்டுகளே ஆகும்.
ஆல்கஹால் (Alcohol) சார்ந்த சானிடைசர்கள் சருமத்தை வறண்டு போகச்செய்து வெட்டுகளையும் சில சமயம் ஏற்படுத்துகின்றன. அயோடின் அடிப்படையிலான சானிடைசர்களின் உகந்த பயன்பாட்டிற்கு, COVID-19 போன்ற வைரஸ்களுக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பை வழங்க, ஒருவரின் நாசி, உதடுகள் மற்றும் கைகளில் தலா இரண்டு சொட்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
I2Cure இல் உள்ள திரவம் ஜப்பானிய (Japan) கடற்பாசியிலிருந்து பெறப்படுகிறது. இது அமெரிக்காவில் (America) ஒரு ஆய்வகத்தில் மேலும் செயலாக்கப்படுகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR