அனைத்து சிக்கல்களுக்கும் நகைச்சுவையாகவும், இயல்பாகவும் தீர்வுகளை எடுப்பதற்கு பெயர் பெற்றது ஜப்பான். ஜப்பானில் உள்ள ஒரு நகரம் ரோபோ ஓநாய்களை வேலைக்கு வைத்துள்ளது. இதை விளையாட்டுக்காக சொல்லவில்லை, உண்மையில் நடைபெறும் உத்தி. கரடிகளை பயமுறுத்துவதற்காக ரோபோ ஓநாய்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ஜப்பானில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்க்கு கரடிகள் மிகவும் ஆபத்தானதாகவும், தொல்லை கொடுப்பதாகவும் மாறிவிட்டன.
ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் (Hokkaido) அமைந்துள்ள தக்கிகாவா (Takikawa) நகரம் சமீபத்தில் ஒரு ஜோடி ரோபோக்களை வாங்கி தெருக்களில் கரடிகள் அதிகம் காணப்படும் ஹாட்ஸ்பாட்களில் நிறுவியது. மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான காட்டு விலங்குகள் மற்றும் காட்டுக் கரடிகள் சுற்றுப்புறங்களில் சுற்றித் திரிவது சகஜமாகிப் போனது. இது செப்டம்பர் மாதக் கதை. ரோபோ ஓநாய்கள் நிறுத்தப்பட்ட பிறகு அந்த பகுதியில் காட்டுக் கரடிகளைக் காணவில்லை என்று நகர அதிகாரிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.
ஜப்பானில், கடந்த ஐந்தாண்டுகளாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. காட்டுக் கரடிகள் பெரும்பாலும் வடக்கு மற்றும் மேற்கு கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக, ஜப்பானின் தேசிய ஊடகம் என்.எச்.கே (NHK) தெரிவித்துள்ளது.
மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்டுக் கரடிகள் அபாயகரமானவை. இந்த பிரச்சனை தான் கரடிகளின் தாக்குதல்களைச் சமாளிப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட அரசாங்கத்தைத் தூண்டியது. அதன் விளைவாக ரோபோக்கள் தெருக்களில் காவல் காக்கின்றன.
கரடிகளின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண அரசாங்கம் கடந்த மாதம் அவசர கூட்டத்தை கூட்டியது.
'மான்ஸ்டர் ஓநாய்' ரோபோவின் வடிவமைப்பைப் பார்த்தால் உண்மையான ஓநாயைப் போலவே இருக்கிறது. ஒளிரும் சிவப்பு கண்களைப் பார்த்தால், அது உண்மையிலுமே ஒநாயைப் போலவே இருக்கிறது.
'மான்ஸ்டர் ஓநாய்' ரோபோவின் மோஷன் டிடெக்டர்கள் செயல்படுத்தப்பட்டவுடன், அது அதன் தலையை நகர்த்தி, வெவ்வேறு விளக்குகளை ஒளிரச் செய்கிறது, மேலும் ஓநாயின் அலறலை 60 வகையில் வெளியிடுகிறது. இயந்திர தயாரிப்பாளரான ஓட்டா சீக்கி (Ohta Seiki) 2018 முதல் சுமார் 70 யூனிட் ரோபோக்களை விற்பனை செய்துள்ளது.
இந்த ரோபோவின் வடிவமைப்பு ஜப்பானிய ஓநாய்களை அடிப்படையாகக் கொண்டது, ஜப்பானின் மத்திய மற்றும் வடக்கு தீவுகளில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வேட்டையாடப்பட்டு அருகிய இனமாக அறிவிக்கப்பட்டன.
பொதுவாக காட்டுக் கரடிகள் நவம்பர் பிற்பகுதியில் உறக்கநிலைக்குச் செல்வதற்கு முன்பு, உணவு தேடும் போது மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆபத்தானதாகவும் மாறும்.eன தாகிகாவா நகர அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே இனி சில மாதங்களுக்கு காட்டுக் கரடிகளின் தொல்லை இருக்காது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR