குஜராத் எம்.எல்.ஏ -கள் இருப்பிடத்தில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை, கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரை பேரம் நடந்தபோது வேடிக்கைப் பார்த்தது ஏன்? என திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்களில் தங்கள் கணக்குகளை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். மேலும் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 1-ம் தேதி முதல் தங்களது ‘பான் கார்டு’ எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு.
‘பான் கார்டு’டன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜுலை மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பயனைப் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது எழுந்த புகார் தொடர்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேவாரி, குர்கான் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ராமமோகன் ராவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தப்பட்டது. அவரது வீடுகள், அலு வலகங்களில் சோதனை நடத்தி ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னாள் தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ராமமோகன் ராவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தப்பட்டது. அவரது வீடுகள், அலு வலகங்களில் சோதனை நடத்தி ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக தலைமைச்செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு உயர் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தலைமை செயலாளர் பதவி என்பது அரசு நிர்வாகத்தில் மிகவும் உயரிய பதவியாகும். இதுபோன்று உயர் பதவிகளில் இருப்பவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது எளிதல்ல.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை, நாட்டின் பல இடங்களில் நடந்து வருகிறது. சென்னையில், இன்று, எட்டு இடங்களில் நடந்த சோதனையில், 100 கிலோ தங்கம், 90 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.