தமிழகத்துக்கு தலை குனிவு- மு.க. ஸ்டாலின் ஆதங்கம்

ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும், ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பிவிடக் கூடாது' என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Last Updated : Dec 21, 2016, 12:54 PM IST
தமிழகத்துக்கு தலை குனிவு- மு.க. ஸ்டாலின் ஆதங்கம் title=

சென்னை: ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும், ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பிவிடக் கூடாது' என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். 

சமிபத்தில் மணல் வியாபாரியான சேகர் ரெட்டியிசென்னையில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் தொழிலபதிபர் பாபு சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து ரூ.130 கோடிக்கும் அதிகமான பணமும், 117 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 

முதல்வரின் செயலாளராக இருந்த ராமமோகன் ராவுக்கு தலைமை செயலாளர் பதவியை ஜெயலலிதா வழங்கிய போதே சர்ச்சைகள் வெளிப்பட்டன. 

இந்நிலையில் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை என்பது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது.

 

 

ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியை ஆட்டி வைப்பவர்கள் உள்ளிட்டோர் தப்பி விடக்கூடாது  என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

 

Trending News