வருமான வரி தாக்கலுக்கு இன்று கடைசி நாள்

Last Updated : Jul 31, 2017, 10:05 AM IST
வருமான வரி தாக்கலுக்கு இன்று கடைசி நாள் title=

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். மேலும் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்களில் தங்கள் கணக்குகளை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைக்குள் வருமான வரித்துறை அலுவலகங்களிலோ அல்லது வருமான வரித்துறை இணையதளத்தின் வழியாகவோ பொதுமக்கள் தங்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும்.

முன்னதாக, நேற்று விடுமுறை நாள் என்றபோதிலும், வருமான வரித்துறை அலுவலகங்களில் கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர் நேரில் கணக்கு தாக்கல் செய்தனர்.

Trending News