முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விவாகரத்து செய்கிறாரா மெலினியா..!!!

ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்பு நாளில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்போது மெலனியா நல்ல மனநிலையில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 14, 2021, 04:20 PM IST
  • மெலனியா டிரம்ப் கடைசியாக ஜனவரி 20 அன்று பொதுவில் காணப்பட்டார்.
  • தனது பெற்றோர்களுடன் சேர்ந்து உணவு எடுத்துக் கொள்கிறார் எனவும் சிலர் கூறுகின்றனர்.
  • அதே சமயம் அவர் டிரம்புடன் இணைந்து, மதிய உணவு எடுத்துக் கொள்கிறார், இரவு உணவு எடுத்துக் கொள்கிறார் எனவும் தகவல்கள் வருகின்றன.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விவாகரத்து செய்கிறாரா மெலினியா..!!! title=

முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியதிலிருந்து தனது கணவர் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை, அவரும் டிரம்ப் (Donald Trump) மீது கோபம் இருந்தது என்று சி.என்.என் செய்தி வெளியிட்டிருந்தது. மார்-ஏ-லாகோ என்ற பகுதியில் ஸ்பா ஒன்றில் மெலனியா அதிக நேரம் செலவிடுவதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்பு நாளில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்போது மெலனியா நல்ல மனநிலையுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதே சமயம் அவர் டிரம்புடன் இணைந்து, மதிய உணவு எடுத்துக் கொள்கிறார், இரவு உணவு எடுத்துக் கொள்கிறார் எனவும் தகவல்கள் வருகின்றன

சில சமயங்களில், அவர் தனது பெற்றோர்களுடன் சேர்ந்து உணவு எடுத்துக் கொள்கிறார் எனவும் சிலர் கூறுகின்றனர்.

இருப்பினும், நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை அடைந்த பின்னர், தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், வெள்ளை மாளிகையை விட்டு ட்ரம்ப் வெளியேறாமல் முரண்டு பிடித்தது, மெலனியாவிற்கு பிடிக்கவில்லை என்றும், இது குறித்து ட்ரம்புடன் மெலனியா சில சமயங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஜனவரி 6 கேபிடல் ஹில் (Capitol Hill) வன்முறை தொடர்பாக,  மெலனியா தனது மவுனத்தை கலைக்க ஐந்து நாட்கள் எடுத்தது ஏன் என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். கேபிடோல் ஹில் வன்முறை அவருக்கு அவப்பெயரை கொடுத்து விட்டதாக அவர் நினைக்கிறோரோ என்ற கருத்தும் கூறப்பட்டது.

குறிப்பிடத்தக்க வகையில், மெலனியா டிரம்ப்  (Melania Trump) கடைசியாக ஜனவரி 20 அன்று பொதுவில் காணப்பட்டார்.

மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, மெலனியா சமீபத்தில் தனது சமூக ஊடக பதிவுகள் அனைத்தையும் நீக்கிவிட்டார், இது அவருக்கும் டிரம்பிற்கும் இடையில் நிலைமை சரியில்லை, ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

மெலனியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெள்ளை மாளிகையின் இறுதி பிரியாவிடை செய்தியைத் தவிர, அவரது அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுவிட்டது.

அதனால், டிரம்பிற்கும், மெலெனியா டிரம்பிற்கும் இடையில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என கூறப்படுகிறது.

ALSO READ | டிரம்ப்புக்கு இரண்டாவது குற்றச்சாட்டு விசாரணையிலும் Republican ஆதரவு கொடுத்தது ஏன்?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News