H4 விசா திட்டத்தை திரும்பப் பெற்றார் அமெரிக்க அதிபர் Joe Biden

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த விசா திட்டத்தை திரும்பப் பெற்றார் புதிய அதிபர் ஜோ பைடன். இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நன்மையளிக்கும்

எச் 1-பி விசா ( H1-B visa) வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் எச் 4 பணி அனுமதியை நிறுத்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திரும்பப் பெறுகிறார். எச் 4 தொழிலாளர்களுக்கான பணி அனுமதி குறித்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவை ஜோ பைடன் நிர்வாகம் வியாழக்கிழமையன்று மாற்றியது.

Also Read | Januvary 28: இந்தியா உட்பட உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவை...  

1 /10

அமெரிக்க அரசாங்கம் எச் 1-பி விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எச் -4 விசாவை வழங்குகிறது. அமெரிக்காவில் பணி புரிபவர்களின் வாழ்க்கை துணை மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விசா கொடுக்கப்படுகிறது. 

2 /10

"வேலைவாய்ப்பு அங்கீகாரத்திற்கு தகுதியான வெளிநாட்டவர்களின் பிரிவிலிருந்து H-4 விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்களை நீக்குதல்" என்ற தலைப்பில் முன்மொழியப்பட்ட விதிமுறை திரும்பப் பெறப்பட்டது என  அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் மாற்றங்களை செய்திருந்தது.  

3 /10

டிரம்ப் செய்த மாற்றங்களை புதிய அதிபர் ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளார் என்று அமெரிக்காவின் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகம் (Management and Budget (OMB)) மற்றும் தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகம் (Office of Information and Regulatory Affairs (OIRA)) கூறுகிறது.

4 /10

ஒபாமா நிர்வாகத்தின் போது தொடங்கப்பட்ட விதிமுறையை ரத்து செய்வதாக அந்நாள் அதிபர் டிரம்ப் 2017ஆம் ஆண்டில் அறிவித்திருந்தார்

5 /10

டிரம்ப் அறிவித்த மாற்றங்கள் தொடர்பான செயல்முறைகளை, அவருடைய ஆட்சிக் காலத்தில்  முடிக்க முடியவில்லை. 

6 /10

டிரம்பின் இந்த நடவடிக்கை எச் 1 பி விசா வைத்திருப்பவர்களில் கிட்டத்தட்ட 90,000 வாழ்க்கைத் துணைகளை (பெருமளவில் பெண்களை) பாதித்தது, அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

7 /10

ட்ரம்பின் நடவடிக்கை பெண்களுக்கு விரோதமானது என்று  கூறி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்

8 /10

டிரம்பின் முடிவு,எச் 1-பி வைத்திருக்கும் திறமையான பெண்கள் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதைத் தடுத்தது.

9 /10

சிலிக்கான் வேலி நிறுவனங்கள் பொறியியல் வேலைகளுக்காக வெளிநாட்டு பணியாளர்களை குறிப்பாக இந்தியர்களை அதிகம் நம்பியுள்ளன. 

10 /10

அமெரிக்காவில் வேலைக்கு விண்ணப்பவர்களில் 93 சதவீதம் இந்தியாவில் பிறந்த நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன