டிரம்ப்புக்கு இரண்டாவது குற்றச்சாட்டு விசாரணையிலும் Republican ஆதரவு கொடுத்தது ஏன்?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணையில் குடியரசுக் கட்சி முன்னாள் அதிபரை காப்பாற்றியதால் அமெரிக்க செனட் டொனால்ட் டிரம்பை விடுவித்தது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 14, 2021, 07:22 AM IST
  • பிப்ரவரி 5ஆம் தேதி முதல் குற்றச்சாட்டு விசாரணையில் டிரம்பின் கட்சியின் ஒரு செனட்டர் டிரம்புக்கு எதிராக வாக்களித்தார்
  • முதல் விசாரணையில் தப்பினார் டிரம்ப்
  • இரண்டாவது விசாரணையிலும் விடுவிக்கப்பட்டதால் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடலாம்
டிரம்ப்புக்கு இரண்டாவது குற்றச்சாட்டு விசாரணையிலும் Republican ஆதரவு கொடுத்தது ஏன்? title=

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணையில் குடியரசுக் கட்சி முன்னாள் அதிபரை காப்பாற்றியதால் அமெரிக்க செனட் டொனால்ட் டிரம்பை விடுவித்தது.

அமெரிக்க செனட் வாக்கெடுப்பில் 57-43 என்ற எண்ணிக்கையில் வாக்குகள் பதிவானதால் டொனால்ட் ட்ரம்ப் தப்பிவிட்டார். இல்லாவிடில் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனையை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற அவப்பெயரை டிரம்ப் பெற்றிருப்பார்.

இந்த குற்றச்சாட்டு விசாரணையில், டிரம்பை தண்டிக்கத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே ஐந்து நாட்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணை நடைபெற்ற அதே (US Capitol) கட்டத்தில் தான் இந்த விசாரணை நடைபெறுவதற்கு அடிப்படையான வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.

Also Read | டொனால்ட் டிரம்ப் Twitter கணக்கிற்கு நிரந்திர தடையா.. உண்மை நிலை என்ன..!!!
 
ஒரு வருடத்தில் இரண்டாவது குற்றச்சாட்டுக்கான விசாரணையை எதிர்கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) அமெரிக்க செனட் சனிக்கிழமையன்று விடுவித்தது. அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய கொடிய தாக்குதலில் அவருடைய பங்கு குறித்த குற்றச்சாட்டை, அவரது குடியரசுக் கட்சியினர் தடுத்துவிட்டனர்.

வாக்கெடுப்பு நடைபெற்றபோது, குடியரசுக் கட்சியின் 50 செனட் உறுப்பினர்களில் ஏழு பேர் டிரம்புக்கு தண்டனை கொடுப்பதற்கு ஆதரவாக இருந்தனர்.

அதிபராக பதவி வகித்த டிரம்ப், தனது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஊக்குவித்தார் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இன்றைய சமூக ஊடக காலத்தில் அது மறுக்க முடியாத பதிவாகவும் மாறிப்போனது. அந்த வன்முறையில் ஒரு போலிஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

டிரம்ப் மீண்டும், பொது அலுவலகத்தில் பணியாற்றுவதைத் தடுப்பதற்கான வாக்கெடுப்பு வெற்றி பெறும் என்றே ஜனநாயகக் கட்சியினர் நம்பினர். எதிர்காலத்தில் டிரம்ப்புக்கு மீண்டும் பதவி வகிக்க வாய்ப்பு கிடைத்ததால், அரசியல் வன்முறையை ஊக்குவிக்க அவர் தயங்கமாட்டார் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

Also Read | டிரம்பிற்கு எதிராக கண்டன தீர்மானம்.. அடுத்தது என்ன

அரசியலமைப்பு சுதந்திரமான பேச்சுரிமையை அவர் பயன்படுத்தினார் என்று டிரம்பின் ஆதரவாளர்கள் வாதிட்டனர். மேலும் அப்போது நடைபெற்ற விஷயக்களில் அவருக்கு நேரடியான எந்த பங்கும் இல்லை என்றும் தெரிவித்தனர்.  

2020 பிப்ரவரி 5ஆம் தேதியன்று நடைபெற்ற டிரம்ப் மீதான முதல் குற்றச்சாட்டு விசாரணையில் வாக்களித்தபோது, டிரம்பின் கட்சியின் ஒரு செனட்டர் அவரை குற்றவாளி என்று அறிவித்து பதவியில் இருந்து நீக்க வாக்களித்தார்.
 
74 வயதான டிரம்ப் தனது கட்சியில் இப்போது வரை வலுவான பிடிப்பை வைத்திருக்கிறார். பணக்கார தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த டிரம்ப், 2024 இல் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் முடிவில் இருப்பதாக தெரிகிறது. அதற்கான முட்டுக்கட்டை இப்போது நீங்கிவிட்டது.  

பிரதிநிதிகள் சபையால் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது அதிபர் டொனால்ட் டிரம்ப். பல விஷயங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னுதாரணங்களை ஏற்படுத்தியவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.  குற்றச்சாட்டு விசாரணையில் குற்றவாளி என நிரூபிக்காததால், மற்றுமொரு மோசமான முன்னுதாரணத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை.

ALSO READ | டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெறுமா.. அரசியல் வல்லுநர்கள் கூறுவது என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News