அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது Black Lives Matter இயக்கம்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு Black Lives Matter இயக்கம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி சிறுபான்மையினருக்கு ஒரு உத்வேகத்தைத் தருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2021, 09:14 PM IST
  • அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது Black Lives Matter இயக்கம்
  • நோபல் பரிசுகள் அக்டோபர் தொடக்கத்தில் அறிவிக்கப்படும்
  • இந்த ஆண்டு பரிசு ஐ.நாவின் உணவு நிறுவனமான உலக உணவு திட்டத்திற்கு கொடுக்கப்பட்டது
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது Black Lives Matter இயக்கம்  title=

அமைதிக்கான நோபல் பரிசுக்கு Black Lives Matter இயக்கம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி சிறுபான்மையினருக்கு ஒரு உத்வேகத்தைத் தருகிறது.

2020 மே மாதம் செய்திகளில் பிரபலமாகத் தொடங்கியது பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) இயக்கம். உண்மையில், 2013 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட்து இந்த இயக்கம். கடந்த ஆண்டு அமெரிக்க காவல்துறையினரின் நடவடிக்கையில் ஜார்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) என்ற கறுப்பின நபரை இறந்ததையடுத்து இந்த இயக்கம் உலகம் முழுவதும் பிரபலமானது.

வெள்ளை இனத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் எட்டு நிமிடங்கள் வரை ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அமெரிக்கா உட்பட உலகளவில் எதிர்ப்புக்களை எழுப்பிய நிகழ்வுக்கு பிறகு கருப்பினத்தவரையும் வாழவிடுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய முழக்கங்கள் உலகளவில் எழுந்தன. 

Also Read | January 30, 2021: உலகில் இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவை

"Black Lives Matter இயக்கம் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வலுவான உலகளாவிய இயக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த இயக்கம் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது, இன அநீதியை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கட்டமைக்கப்படுகின்றன..." என Black Lives Matter இயக்கத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுப்பதற்கான  முன்மொழிவை முன்வைத்த சோசலிச சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் ஈட் கருத்து தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்காக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் நிறுவனர் மற்றும் விசில்ப்ளோவர் ஜூலியன் அசாங்கே, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஊடக உரிமைகள் குழு ஆர்.எஸ்.எஃப் மற்றும் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா தலைமையிலான பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவரும் அடங்குவர்.

நோபல் பரிசுகள் அக்டோபர் தொடக்கத்தில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு பரிசு ஐ.நாவின் உணவு நிறுவனமான உலக உணவு திட்டத்திற்கு சென்றது.

Also Read | தாயின் சடலத்தை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News