இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 4ம் தேதி வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடர்ந்த வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் ஆஜராகியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும் ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் தரப்பினர்களும் தங்களது ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரமாண பத்திரங்கள், எம்எல்ஏக்கள்,எம்.பி.,க்கள் ஆதரவு அடிப்படையில் இந்த முதிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை சசிலகா தரப்புக்கு சாதகமாகப் பெறுவதற்கு டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதனை தொடர்ந்து தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, தரகராக செயல்பட்ட சுகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு ஜாமினில் விடுதலை செய்யப்ப்பட்டனர்.
TTV Dhinakaran appears before Delhi's Patiala House Court in 'two leaves' bribery case (File Pic) pic.twitter.com/VmrFM6hLU3
— ANI (@ANI) March 14, 2018
இந்த நிலையில், சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் நீதிமன்றத்தில ஆஜராகியுள்ளார். தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் இருந்து வழக்கு பட்டியாலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.