தன்னிடம் சிபாரிசு கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு செய்தியாளர்களிடம் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்!
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னிடம் சிபாரிசு கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக வாட்ஸ் அப்பில் ஆடியோ பரவி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்ததற்கான சான்றும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ரெக்கமன்ட்டேஷனுக்கு போன பெண்ணுக்கு குழந்தை குடுத்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோவில் சமரசம் பேசும் அமைச்சர் ஜெயக்குமார்
இதில் மாண்புமிகு வேற#குழந்தைகுடுத்தஜெயக்குமார் pic.twitter.com/UKuKAup9he
— ஹாமிதா தஸ்லீமா (@HamithaThaslima) October 22, 2018
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தன் மீது குற்றம்சாட்டப்பட்டு வந்துள்ள ஆடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விவகாரம் குறித்து அவர் தெரிவிக்கையில்... "வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோவானது என்னுடையது அல்ல, என்னை நேரில் சந்திக்க தைரியம் இல்லாத விஷமிகள் இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கன்னு பாடுறது கிண்டலுக்குரியது அல்ல! பையன MP ஆக்கிட்டு ராயபுரத்துல பாய போட்டது தான் கிண்டலுக்குரியது!
பர்த் சர்டிபிகேட்டே போட்டானுவ, ஜெயக்குமார்ன்னு பேர நல்லா அழுத்தமா அடிச்சிருக்கானு ழ்த்துக்கள் அ #குழந்தைகுடுத்தஜெயக்குமார் pic.twitter.com/moDfzeSm9F
— #AdmkFails (@AdmkFails) October 22, 2018
மேலும் இந்த குற்றச்செயலுக்கு பின்னால் டிடிவி தினகரம், சசிகலா குடும்பதினர் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் மீது களங்கம் கற்பிக்க மாஃபியா கும்பல் திட்டமிட்டு செய்த வேலை இது. ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைத்தில் பகிரப்பட்டுவரும் பிறப்பு சான்றிதழ் குறித்து கேட்கையில், பிறப்பு சான்றிதழினை யார் வேண்டுமென்றாலும் பெறலாம் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் #குழந்தைகுடுத்தஜெயக்குமார் என்னும் ஹாஷ் டேக் ட்ரண்ட் ஆகி வருகின்றது.