டிடிவி-க்கு குறையும் ஆதரவு: பழனிச்சாமி அணியில் எம்.பி.வசந்தி!

Last Updated : Sep 22, 2017, 12:54 PM IST
டிடிவி-க்கு குறையும் ஆதரவு: பழனிச்சாமி அணியில் எம்.பி.வசந்தி! title=

டிடிவி ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இனைந்தார்.

பரபரப்பிற்கு வேறு பெயர் அதிமுக எனும் அளவிற்கு தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது அதிமுக அரசு.

அதிமுகவின் அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் இணைந்து செயல்படத் தொடங்கிவிட்ட நிலையில், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்பட தொடங்கினர். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்நிலையில் இன்று காலை அதிமுக சார்பில் தென்காசி பகுதியினில் வெற்றிப்பெற்ற டிடிவி ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார். தற்பொழுது வெளியான தகவலின்படி எம்.பி. வசந்தி முருகேசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இனைந்துள்ளதாக தெரிகிறது.

Trending News