உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்!
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறுகையில்; ‘கட்சி பதவிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அமமுக உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயம் போட்டியிடும். நிரந்தர சின்னம் கிடைக்கவில்லையெனில் என்றால் சுயேட்ச்சையாவது போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருதுகின்றனர்’ என்று தினகரன் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்த இடைத்தேர்தல்களில் அமமுகவினர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.