1973-ல் இருந்து மோகன் மேகின் தலைவர் மற்றும் எம்.டி. -யாக இருந்த கபில் மோகன், கடந்த ஜனவரி 6 அன்று காலமானார். ரம் "ஓல்ட் மங்க்"-ன் வளர்சிக்கு பின்னால் இருந்த மாமனிதர் என்று கருதப்படும் இவர் தனது 88 வயதில் காலமானார்.
தமிழ் திரையுலகின் பிரபல கலை இயக்குனரும், நடிகருமான ஜி.கே என்கின்ற கோபி காந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 60. ஜி.கே. என அழைக்கப்படும் அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இவர் 2௦௦க்கும் மேற்பட்ட படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். ரஜினி நடித்த அருணாச்சலம் படத்திற்கு பிரமாண்டமான செட் அமைத்ததற்காக சிறந்த கலை இயக்குனர் என்ற மாநில அரசு விருதை பெற்றுள்ளார். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து உள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவின் மகன் பயணம் செய்த கார் மோதி சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு நபர் உயிரிழந்தார்.
எடியூரப்பா 2008 முதல் 2011 வரை அவர் கர்நாடக முதலமைச்சராக இருந்தார். இவரது மகன் பாஜக சார்பில் ஷிமோகா தொகுதி எம்.பியாக ராகவேந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டவர்
விசாரணையில் பொது உயிரிழந்தவரின் பெயர் சுரேஷ் {24}
விபத்தின் போது காரை ஒட்டி சென்றவர் கார் டிரைவர் ரவிச்சந்திரன் அல்லது எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா தான் ஓட்டினாரா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஸ்பெயினில் சேவிலே அருகே தாஸ் ஹெர்மனாஸ் என்ற நகரத்தை சேர்ந்தவர் ரோசியோ கார்டெஸ் நுனெஷ். இவருக்கு வயது 25. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த இவரை கேவிலே நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமத்திருந்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
அதைத் தொடர்ந்து அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வார்டுக்கு லிப்ட் மூலம் கொண்டு சென்ற போது லிப்டுக்குள் நுழையும்போது எதிர்பாராத விதமாக அது செயல்பட தொடங்கியதால் அந்த நேரம் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த ரோசியோவின் தலையை லிப்ட் கதவு நசுக்கியது.
திரிபுராவின் முதல் மந்திரி மாணிக் சர்க்கார் அவர்களுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமுகவலைத்தளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'உலக கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கவுன்சில்' சார்பில் ஒரு போலி பேஸ்புக் கணக்கின் மூலம் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்டு இருந்ததாவது "மாணிக் சர்க்கார்" -யை கொல்பவருக்கு ரூ .5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பதிவிட்டு இருந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை, இந்த கொலை மிரட்டல் பதிவானது போலி பெயரைப் பயன்படுத்தி பதிவிட்டிருப்பதாக கூறியுள்ளது.
கவிஞர் நா. முத்துக்குமாரின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதிமஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் மரணமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.