ஹைதராபாத் சாலை விபத்தில் 5 பேர் பலி!

ஜோகூலாம்பா மாவட்டம் காட்வால் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி, 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!

Last Updated : Jan 8, 2018, 01:31 PM IST
ஹைதராபாத் சாலை விபத்தில் 5 பேர் பலி! title=

ஹைதராபாத்: ஜோகூலாம்பா மாவட்டம் காட்வால் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி, 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ஓட்டுனரின் சோர்வு காரணமாக அவர் தனது கட்டுப்பாட்டினை இழந்து வாகனம் தடம் புரண்டுள்ளது.

தார்ர்-கோன்ப்பாட் கிராமங்களின் புறநகர்ப்பகுதியில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்தபோது போருந்தில் 36 பயணிகள் இருந்தனர் எனவும், இதில் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகினர் எனவும் தெரிவித்துள்ளனர். 

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது!

Trending News