குப்பை வண்டியில், நிருபரின் சடலத்தை எடுத்துச்சென்ற காவல்துறை!

கர்நாடக மாநிலம் ஹுப்லி-யில், பத்திரிகையாளர் ஒருவரின் இறந்த உடலினை குப்பை வாகனத்தில் வைத்து எடுத்தச் சென்ற கொடுமை நிகழ்ந்துள்ளது!

Last Updated : Jan 15, 2018, 07:45 PM IST
குப்பை வண்டியில், நிருபரின் சடலத்தை எடுத்துச்சென்ற காவல்துறை! title=

கர்நாடக மாநிலம் ஹுப்லி-யில், பத்திரிகையாளர் ஒருவரின் இறந்த உடலினை குப்பை வாகனத்தில் வைத்து எடுத்தச் சென்ற கொடுமை நிகழ்ந்துள்ளது!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிக்கையாளராக வேலை புரிந்தவர் மௌனேஷ் போத்தராஜ், நேற்று (ஞாயிறு) காலை 8 மணியளவில் விபத்தில் ஒன்றில் அகால மரணம் அடைந்தார். 

மரணம் அடைந்த இவரது உடலினை காவல் துறையினர் குப்பை எடுத்துச்செல்லும் வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர். ஆம்புலன்ஸ் பற்றாகுறை காரணமாக இவ்வாறு கொண்டுச்செல்லப் பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், "ஏன் காவல்துறையின் ஜீப்பில் எடுத்துச் செல்லவில்லை?" என்று பொதுமக்கள் கேள்விக்கு காவல்துறை அதிகாரிகளிடம் பதில் இல்லை.

இச்சம்பவம் குறித்து மௌனேஷ் குமாரின் சகோதரர் தெரிவிக்கையில், குப்பை வண்டியில் கொண்டு வந்தது மட்டும் அல்ல, என் சகோதரரின் உடலினை பிரேத பரிசோதனை செய்யவும் மிகுந்த காலதாமதம் செய்தனர். மேலும் ரூ.700 பெற்ற பின்னரே பிரேத பரிசோதனையினையும் மேற்கொன்டனர்" என தெரிவித்துள்ளார். 

Trending News