நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, கொரோனா வைரஸ் நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டபின், முழு அடைப்பை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
சமீப காலமாக சினிமா துறையில் பயோபிக் படங்கள் பிரபலமாகி வருகின்றன, குறிப்பாக அரசியல்வாதிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
கொரோனா வைரஸ் நோய் (COVID-19) ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்கப்பட்டதன் வெளிச்சத்தில், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் (TNPHA), 1939 மற்றும் தொற்று நோய்கள் சட்டம், 1897 ஆகியவற்றின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவது சட்டப்படி குற்றம் என பொது இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
பிரதமர் மோடியுடனான தனது வீடியோ கான்ப்ரஸிங் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாநிலத்திற்கு சோதனை கருவிகளின் விநியோகத்தை அதிகரிக்க 3000 கோடி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (19.2.2020) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 30.1.2020 அன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் 72 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (29.1.2020) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (29.1.2020) தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 83 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 240 புதிய பேருந்துகளையும், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
ஆந்திர முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரைவை, ஆந்திர சட்ட மேலவையை கலைக்கும் தீர்மானத்திற்க்கு ஒப்புதல் அளித்தது. அமைச்சரவை நகர்ந்த விரைவான தன்மை ஒரு சிலரை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம், ஆனால் அந்த முடிவு பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதே...
JNU வன்முறையில் தாக்கப்பட்ட JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை, கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி கேரளா இல்லத்தில் வைத்து சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
“மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்” என்று அவசரச்சட்டம் பிறப்பித்திருக்கும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படும் நகரத்தின் அனைத்து சாலைகளையும் ஐரோப்பா சாலைகளை போல தில்லி அரசு மறுவடிவமைக்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.