பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

இரண்டாம் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Last Updated : Jan 28, 2020, 09:38 PM IST
பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு! title=

இரண்டாம் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடுகையில்., ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு 1.2.2020 முதல் 31.5.2020 வரை 120 நாட்களுக்கு 7776 மி.கன அடி நீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டம் ஆகியவற்றில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News