மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஏன் அந்த அணைக்கூடாது என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைப்போம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இன்று ஆலோசனை நடத்தினார். அனைத்து கட்சி கூட்டத்தில் (All-party meeting) ஒருமனதாக மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
"நாம் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்து தான் இருக்கும். தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும். காவிரியில் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை (CWMA) தனது எல்லைக்குள் கொண்டுவருவது தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம் எடுத்த முடிவை வைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப திமுக முயற்சிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
சம்பா பயிர்கள் கருகி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் பரவாயில்லை, மணல் கொள்ளை தடையின்றி நடக்க வேண்டும் என்று நினைப்பது மக்கள் நல அரசாக இருக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலப்பது அதிமுக அரசின் மோசமான நீர் மேலாண்மை காட்டுகிறது என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.