காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2500 கனஅடியாக அதிகரிப்பு!

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500கன அடியாக அதிகரிப்பு!!

Last Updated : Jul 19, 2019, 02:59 PM IST
காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2500 கனஅடியாக அதிகரிப்பு! title=

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500கன அடியாக அதிகரிப்பு!!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகள் மற்றும் குளங்கள் நிறைந்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 9 ஆம் தேதி டிவிட்ட பதிவில் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்திற்கு KRS அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு வழியாக இன்று ஒக்கேனக்கலுக்கு வந்தடையும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளிலிருந்து, காவிரியில் திறந்துவிடப்படும், நீரின் அளவு, வினாடிக்கு, 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வழிகறிது. இதனால், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, வினாடிக்கு, 2000 கன அடியும், கபினி அணையிலிருந்து, வினாடிக்கு, 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, இவ்விரு அணைகளிலும் சேர்த்து மாெத்தம், 855 கன நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அது 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Trending News