டெல்லியில் IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவாலுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கெடுத்துள்ளார்!
சரித்திர நாயகன் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 3 ஆண்டுகளில் தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அலுவலகம் ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகன் அமித்திடம் மன்னிப்பு கேட்டார்.
புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீல வேகன் ஆர் கார் இன்று உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் மீட்கப்பட்டுள்ளது!
கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி டெல்லி செயலகத்தில் கேட் எண் 3-லிருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீல வேகன் ஆர் திருடப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது இந்த கார் மீட்கப்பட்டுள்ளது.
Blue Wagon R car which was earlier used by Arvind Kejriwal and had been stolen on Oct 12 has been recovered from Ghaziabad pic.twitter.com/MFgvvrUdWe
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டதை அடுத்து, டெல்லி போலீஸ்க்கு நன்றி சொன்ன கெஜ்ரிவால்,
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இதுதான் டெல்லி போலீஸ். அவர்களின் அலச்சியத்திற்க்கு மிக்க நன்றி. உங்களுடைய கவனம் எங்கு இருக்கிறது? என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் டெல்லியில் திருடப்பட்டுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரத்தில், அதுவும் தலைமை செயலகத்திற்கு அருகில் முதல்-அமைச்சரின் கார் திருடப்பட்டுள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில்களில் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு அடுத்த மாதம் ( அக்டோபர் ) முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மே மாதம் மெட்ரோ ரயிலின் டிக்கெட் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ரயில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதற்கு டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ள கருத்து:-
சென்னையில் உள்ள கமல் ஹாசனின் இல்லத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. இதன் பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-
சென்னையில் உள்ள கமல் ஹாசனின் இல்லத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.
Tamil Nadu: Delhi CM Arvind Kejriwal meets Kamal Haasan at his residence in Chennai. pic.twitter.com/VfR4jkNpj5
— ANI (@ANI) September 21, 2017
ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வர உள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை டிவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார். இதற்கு அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததுடன் கடுமையான வாசகங்களையும் பயன்படுத்தினர். இதனையடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகிறது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த நீர்த்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பிறகு கபில் மிஸ்ரா, அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகூறினார். அதாவது அக்கட்சி முக்கியத் தலைவரான அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் வாங்கியதை நேரடியாகவே பார்த்தேன் என குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக கபில் மிஸ்ரா தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று 5_வது நாளாக அவருடைய போராட்டம் தொடர்ந்தது.
ஊழல் குற்றச்சாட்டை குறித்து ‛வாய்மையே வெல்லும்' என கெஜ்ரிவால் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கட்சியில் பல்வேறு பிரச்னைகள் சிக்கி தவிக்கும் ஆம் ஆத்மி, தற்போது அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அந்த கட்சின் அமைச்சர் பதவியில் இருந்து கபில் மிஸ்ரா ஊழல் குற்றம் சாட்டி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.